கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கணவனை பார்வையிட சென்ற பெண்ணொருவர் தங்க நகைகளை பறிகொடுத்துள்ளார்.
கண்டி தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவுக்கு முன்பாக காத்திருந்த பெண்ணொருவர் போதைப்பொருள் கலந்த பானத்தை அருந்தி மயக்கமடைந்ததை அடுத்து, இனந்தெரியாத பெண் ஒருவர் தங்க நகைகளை திருடிக் கொண்டு ஓடியதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸாரின் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். கண்டி தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரைப் பார்ப்பதற்காக வந்த பெண், நோயாளிகளைப் பார்க்கும் நேரம் வரை அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் அங்கு அமர்ந்திருந்த மற்றொரு பெண் பேச்சுக் கொடுத்தார். இருவரும் பேசி நட்பாகியதை தொடர்ந்து, மற்றைய பெண் கொடுத்த பானத்தை அருந்தியுள்ளார். அதை தொடர்ந்து மயக்கமாகி விட்டார். சுயநினைவு திரும்பியபோது, தங்க நகைகள் மற்றும் பணம் காணாமல் போனதை கவனித்தார்.
Leave Comments